இந்தியன் 2 திரைப்படத்தின் கதாநாயகிகள் யார் என்று தெரியுமா??

Last Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (15:55 IST)
திரைப்படத்தின் கதாநாயகிகள் யார் யாரென ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 திரைப்படம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் இரட்டை வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ஒரே வேடத்தில் தான் நடிக்கிறார். மேலும் வயதான தோற்றத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு, பேரனாக சித்தார்த் நடிக்கவுள்ளார். அனிரூத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :