ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (21:10 IST)

சென்ற முறை 500, 1000.. இந்த முறை 370: கமல்ஹாசன் கண்டனம்

காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல். இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எந்த விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவினை எடுத்து இருக்கின்றது
 
370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்ற திட்ட வேண்டும். 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது குறித்து தனியாக விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் எதிர்ப்புகளை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கின்றது
 
சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370-வது சட்டப்பிரிவை நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்கு தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது