1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. LIK first punch song release postponed

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

லவ் டுடே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ப்ரதீப் ரங்கநாதன் LIK படத்தில் நடித்து வருகிறார்.  இதில் எஸ் ஜே சூர்யா, சீமான் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றன. லலித்குமார் தயாரிக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. எதிர்கால காதல் பேண்டசி படமாக இது உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவை மற்றும் சிங்கப்பூரில் அடுத்தடுத்து நடந்தது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் “தீமா” வெளியாகி கவனம் பெற்றது. அதன் பின்னர் ஷூட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த படம் செப்டம்பர் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று வெளியாவதாக இருந்த இந்த படத்தின் ‘first punch’ பாடல் ரிலீஸ் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தலைவர் தரிசனத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்