1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஜனவரி 2020 (17:41 IST)

அட்லியின் அடுத்த படத்திற்கு மனைவி பிரியா நாயகியா?

இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா, தொலைக்காட்சி தொடர்களிலும் சிங்கம், சிங்கம் 2, உள்பட ஒருசில படங்களிலும் நடித்தவர் என்பது தெரிந்ததே. ஆனால் திருமணத்திற்கு பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுக்க முழுக்க குடும்பத்தலைவியாக மாறினார். 
 
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி, ‘பிரியாவின் நடிப்பு திறமை குறித்து தனக்கு தெரியும் என்றும்  நிச்சயம் அவரை ஒரு நல்ல கேரக்டரில் நடிக்க வைப்பேன் என்றும் கூறினார். இதனால் அட்லியின் அடுத்த படத்தில் பிரியா நாயகியாகவோ அல்லது முக்கிய கேரக்டரிலோ நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் அட்லியின் அடுத்த படம் குறித்து இன்னும் ஒருசிறு தகவல் கூட வெளிவரவில்லை. அவர் மூன்று கதைகளை முழுமையாக திரைக்கதை அமைத்து தயார் நிலையில் இருப்பதாகவும் ஆனால் இன்னும் அவர் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சொந்தப்படம் எடுக்க அட்லி முடிவு செய்திருப்பதாகவும், அந்த படத்தில் அனேகமாக அவரது முதல் பட நாயகன் ஆர்யா நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது