செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (12:44 IST)

கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?

கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கியதிலிருந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல நடிகை கவுதமியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
கமல்ஹாசனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்த நடிகை கவுதமி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இந்த நிலையில் கவுதமிக்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பதவி வழங்க இருப்பதாகவும் அவரை தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தி மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வைக்க பாஜக மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
கமல்ஹாசனுக்கு எதிராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?
குறிப்பாக கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த சில நாட்களில் கவுதமியின் பிரச்சாரம் இருக்கும் என்றும் இதனை அடுத்து கமல்ஹாசனுக்கு எதிராக நடிகை கவுதமியை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே நடிகை குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், உட்பட பல நடிகைகள் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகை கவுதமியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது