1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 20 மார்ச் 2024 (12:43 IST)

திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் நந்தினி ஜே.எஸ் உருவாக்கி, சுக்தேவ் லஹிரி தயாரித்த தமிழ் சித்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாகவும், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
 
இன்ஸ்பெக்டர் ரிஷி, மார்ச் 29 முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்ய உள்ளது.
 
நந்தினி ஜே.எஸ் உருவாக்கிய இந்தத் தொடரில் நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார், மேலும் சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல திறமை வாய்ந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
பத்து எபிசோட்கள் கொண்ட இத்தொடர் மார்ச் 29 அன்று பிரத்யேகமாக பிரைம் வீடியோவில் இந்தியாவிலும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரீமியர் செய்யப்பட உள்ளது.
 
இத் தொடர், பசுமை மற்றும் வனவிலங்குகள் நிறைந்த தமிழ்நாட்டின் ஒரு அழகிய கிராமத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. 
 
“இன்ஸ்பெக்டர் ரிஷி வேடத்தில் நடிப்பது சவாலான மற்றும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் பன்முகத் தன்மையை அறிந்து கதாபாத்திரத்தை உள்வாங்க இத்தொடர் எனக்கு வாய்ப்பை வழங்கியது,‘’ 
 
“இந்தத் தொடர் பிரைம் வீடியோவுடனான எனது இரண்டாவது தொடராகும். இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரின் புதிரான உலகத்தை பார்வையாளர்கள் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.நவீன் சந்திரா.
 
"இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரில் வன அதிகாரி காத்தியின் பாத்திரத்தை ஏற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
 
கதாசிரியர்கள் எனது கதாபாத்திரத்தை மிக நுணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள், மேலும் காத்தியின் குணாதிசயங்கள் என்னுடன் ஆழமாக எதிரொலித்தன. செட்டில் இருந்த ஆதரவான சூழல், திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து, காத்தியின் மென்மையான மற்றும் கடுமையான ஆளுமையை முழுமையாக வெளிப்படுத்த அனுமதித்தது, ”என்று சுனைனா பகிர்ந்து கொண்டார்.
 
டிரையிலர் இணைப்பு:
 https://youtu.be/4CKU89MI0_0?si=Z1XVP-v1vDefBNXO