வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (21:21 IST)

'செஞ்சு முடிக்கிறனோ இல்லையோ.. இனி இது என்னோட வேலை'- அயலான் டிரைலர் ரிலீஸ்

ayalan
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அயலான்’.  இத்திரைப்படம் இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதி அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனகூறப்படும் நிலையில், இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமாக நடக்க உள்ளது.

படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் கையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,  அயலான் பட டிரைரைலர் இன்று ரிலீஸாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று அயலான் பட டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில், சிவகார்த்திகேயன் மற்றும் அயலானுக்கு இடையிலான அறிமுகம், நட்பும்; இப்படத்தில் வில்லனுடன் மோதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏ.ஆர். ரஹ்மானில் பின்னணி இசை படத்திற்கு   பக்கபலமாக அமைந்துள்ளதாலும் வித்தியாசமான திரைக்கதை என்பதாலும் டிரைலர் இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

ரசிகர்கள் ஆர்வமுடன்  பொங்கல் பண்டிக்கை இப்படத்தை பார்க்க ஆர்வமுடன் உள்ளனர்.