திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 14 மார்ச் 2024 (17:39 IST)

இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு

நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில்,மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில், சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோருடன் இணைந்து நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
“இன்ஸ்பெக்டர் ரிஷி” இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் உள்ள  240 நாடுகளில்  மார்ச் 29 தேதி அன்று பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது
 
இந்தியாவில் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுது போக்கு மையமாக திகழும் பிரைம் வீடியோவில்  அதன் தமிழ் ஒரிஜினல் திரைப்படமான “இன்ஸ்பெக்டர் ரிஷி” வெளியிடப்படும் தேதியை  அறிவித்தது. 
 
நந்தினி ஜே.எஸ்  உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்த திகிலூட்டும் க்ரைம் டிராமாவில்  பல்துறை திறன் கொண்ட நடிகர் நவீன் சந்திரா வுடன் இணைந்து சுனைனா,ரவி, மாலினி, ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல்  உட்பட மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 
 
பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது