பிரபாஸின் 'சலார்' பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு...ரசிகர்கள் கொண்டாட்டம்
பிரபாஸின் சலார் பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் பிரபாஸ். இவர் நடிக்கும் சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான். இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார்.
பேன் இந்தியா படமாக சலார் ரிலீஸாகவுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சலார் படத்தை தமிழகத்தில் வெளியீடுவதற்கான உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் பெற்றது.
இன்று தீபாவளியையொட்டி இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், சலார் டிரைலவர் வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி மாலை 7:19 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
மேலும், உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி ஐமேக்ஸில் எக்ஸ்பீரியன்ஸில் இப்படம் ரிலீஸாகும் என்பதையும் உறுதி செய்து, பிரபாஸின் புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.