1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:51 IST)

முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த காமெடி நடிகர்!

நடிகர் பிரேம்ஜி சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் தமிழ்- தெலுங்கு படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பிரேம்ஜி தன்னை ஒரு நகைச்சுவை நடிகர் என்று சொல்லிக்கொண்டாலும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்குவது என்னவோ அவரின் அண்ணன் வெங்கட்பிரபு மட்டும்தான். அந்த அளவுக்கு அவரை யாரும் சீண்டுவதே இல்லை.

இந்நிலையில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். சிவகார்த்திகேயன் படத்தில் வழக்கமாக யோகி பாபு, சூரி அல்லது சதீஷ் ஆகியவர்கள்தான் நடிப்பார்கள். முதல் முறையாக சிவகார்த்திகேயனோடு கூட்டணி அமைத்துள்ள பிரேம்ஜிக்கு இந்த படமாவது திருப்புமுனையை ஏற்படுத்துமா என்று பார்ப்போம்.