ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (07:19 IST)

சபாநாயகன் படத்துக்கு அதிகரிக்கும் தியேட்டர்… சலார் தோல்விதான் காரணமா?

சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை உள்ளிட்டவர்கள் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் மற்றும் டிரைலர் கோடிட்டு காட்டியது.

இதையடுத்து இந்த படம் சலார் படம் ரிலீஸான நாளில் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் 180 திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது இரண்டாவது வாரத்தில் இந்த படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சலார் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்ததே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

இத்தனைக்கும் இந்த வாரம் 11 புதிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.