1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:46 IST)

திரையரங்கில் ஏமாற்றிய சலார்… அதனால் சீக்கிரமே ஓடிடி ரிலீஸா?

பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் எதிர்பார்க்கப்பட்டதை விட வெகு சீக்கிரமாகவே ஓடிடியில் ரிலீஸ் ஆக வுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி 12 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. திரையரங்கில் ரிலீஸான 20 நாட்களிலேயே ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.