1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 12 நவம்பர் 2018 (20:11 IST)

டாப் ஸ்டார் பிரசாந்துக்கா இந்த நிலைமை.... ரசிகர்கள் குமுறல்

ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த பிரசாந்த் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் சைட் ஆக்டராக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதாவனுக்கு முன்பு சாக்லெட் பாய் ஆக தமிழ் சினிமாவில் வளம் வந்தவர் பிரசாந்த். பல முன்னணி நடிகைகளுடனும், குறிப்பாக உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த நடிகர் அவர். 
 
இப்படி ஒரு நடிகர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் சைட் ஆக்டராக நான்கு பேருடன் ஒருவராக இணைந்து நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் வெளியான ராம் சரணின் வினய விதய ராமா டிரெய்லரை பார்த்துதான் பிரசாந்த் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால், படத்தில் அவரது கதாபாத்திரம் என்னவென்பது இன்னும் தெரியவில்லை. 
 
இதோ ரசிகர்களின் குமுறல்களில் சில...
டபுள் பைக்ல ஸ்டேண்டிங்ல வந்த வர்டா எங்க டாப் ஸ்டார்... அவர இப்படி ஆக்கிடிங்களே...
 
டாப் ஸ்டார் பிரசாந்த் தெலுங்கு பக்கம் சைட் ரோலுக்கு ஒதுங்கியாச்சு போல..  
 
தமிழ்ல அஜித், விஜய்க்கு வில்லனா நடிச்சா செமயா செக்கெண்ட் இன்னிங்ஸ் தொடங்கலாம்...
 
ஐஸ்வர்யா ராயுடன் உலக அதிசயங்களை சுற்றி பார்த்து டூயட் பாடின மனுஷன்யா அவரு...
 
இது போன்ற பல கமெண்டுக்கள் டுவிட்டரில் பதிவிடப்பட்டு வருகிறது.