திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (15:19 IST)

100 கோடி வசூலை ஈட்டிய விஜய்யின் கீதா கேவிந்தம்!

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் மெகா ஹிட் அடித்து தெலுங்கு ரசிகர்களை ஈர்த்தவர் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இதையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய கீதா கோவிந்தம் படம் பயங்கரமாக  ஹிட் அடித்துள்ளது. இதில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே... பாடல் மொழிகளையும் தாண்டி பல மாநில ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 12 நாட்களில் 1 கோடியே 9 லட்ச ரூபாயை  ஈட்டியுள்ளது.
 
இந்நிலையில், இப்படம் 100 கோடி வசூலை எட்டியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாது அமெரிக்காவிலும் 2 மில்லியன் வசூல்  குவித்துள்ளது. மிக இளம் வயதிலேயே 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதனால் அவரது மார்க்கெட்டும் அதிரடியாக  உயர்ந்துள்ளது.