1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (20:51 IST)

நடிகர் பிரகாஷ்ராஜ் நடிகையை திட்டியதுடன், காமெடி நடிகரை அடித்தாரா?

திரிநாதராவ் இயக்கத்தில் ஹலோ குரு பிரேம கேசமே என்ற தெலுங்கு படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார். இதில் ராம்போத்தினேனி, அனுபமா பரமேஸ்வரன், பிரணிதா சுபாஷ், நகைச்சுவை நடிகர் சப்தகிரி உள்பட பலர் நடித்து வருகிறார்கள்.
ரயில்வே ஸ்டேசன் செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது, இந்நிலையில் படப்பிடிப்பின் போது பிரகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் சப்தகிரியை அடித்து விட்டதாக தகவல் பரவியது. இதேபோல் அனுபமா பரமேஸ்வரன் சரியாக வசனம் பேசவில்லை என்றும் இதற்காக அவரை பிரகாஷ்ராஜ் திட்டியதாகவும் தகவல்  பரவியது.
 
இதற்கு விளக்கம் அளித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, "சப்தகிரியை நான் அறைந்ததாக பரவிய தகவலில் உண்மை இல்லை. நான் எதற்காக அவரை அடிக்க  வேண்டும். சப்தகிரி வளர்ந்து வரும் நடிகர். அவரை வாழ்த்தினேன்" என்றார்.