1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 23 மே 2018 (20:04 IST)

மம்முட்டிக்கு மகளான பூமிகா...

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பூமிகா திருமணத்திற்கு பிரகு படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டார். தற்போது ஆண் குழந்தைக்கு தாயகியுள்ள இவர் படங்களில் தலைகாட்ட துவங்கியுள்ளார். 
 
கதாநாயகியாக நடிக்கவிட்டாலும் கதையின் நாயகியாக உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். 
 
தற்போது இவர் யூடர்ன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்நிலையில், தெலுங்கில் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. 
 
மகி ராவ் இயக்கும் இந்த படத்தில் ஒய்.எஸ்.ஆராக மம்முட்டி நடிக்கிறார். அவரது மகள் கேரக்டரில் நடிகை பூமிகா நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.