ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:18 IST)

ரஜினியை ட்ரோல் செய்த பதிவை லைக் செய்த ப்ரதீப் ரங்கநாதன்… வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

லவ் டுடே படத்தின் மூலம் கவனம் ஈர்த்துள்ள ப்ரதீப் ரங்கநாதன் அடுத்து ரஜினி படத்தை இயக்கப் போகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ள படம் லவ் டுடே. இந்த படத்தை இயக்கி நாயகராகவும் அறிமுகமாகியுள்ளார் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமான நிலையில் பிரச்சினைகளும் தேடி வந்துள்ளது.

ஆரம்ப காலங்களில் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த ப்ரதீப் அப்போதைய சமயங்களில் சினிமா, சினிமா பிரபலங்கள் குறித்த ட்ரோல் பதிவுகளை இட்டுள்ளார். அதை நெட்டிசன்கள் மீண்டும் ஷேர் செய்து வைரலாக்கினர். இந்த சர்ச்சைகள் ஓய்ந்துள்ள நிலையில் இப்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் ப்ரதீப்.

ரஜினிகாந்த் ப்ரதீப் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பெயர் “ஜாய்ண்ட் ஜகதீசன்” என பெயர் வைத்து போஸ்டர் ஒன்றை உருவாக்கி, பரப்பினர். அதில் ரஜினி ரசிகர்களை மெண்ட்லான்ஸ் எனக் கூறி ட்ரொல் செய்திருந்தனர். அந்த பதிவை லைக் செய்துதான் இப்போது ரஜினி ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் ப்ரதீப்.