சிம்பு நீங்க ஓரம் போங்க.. பிரதீப் ரங்கநாதன் தூக்கிட்டு வந்த புது டீம்!
இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் அடுத்தடுத்த படவாய்ப்புகள் அவருக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிம்பு நடிக்க இருந்த கொரோனா குமார் படத்தில் தற்போது பிரதீப் நடிக்க உள்ளார். சிம்பு பத்து தல ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் தற்போதைய ஹிட் நடிகராக பார்க்கப்படும் பிரதீப் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வேல்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.