சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு… முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பிரபு நன்றி
இன்று பிறந்தநாள் காணும் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 94 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசனின் 94வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாஜியின் பிறந்தநாளை அரசு கலைவிழாவாக கொண்டாடவும் அறிவித்துள்ளார். இதற்கு நடிகர் திலகம் சிவாஜியின் இளைய மகனான பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.