1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (08:25 IST)

கூகுள் doodleலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்
 
கடந்த 1952 ஆம் ஆண்டு பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்
 
கடந்த 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற திரைப்படம்தான் அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்புச் சக்கரவர்த்தி, நடிகர் திலகம் உள்பட பல பட்டங்களை ரசிகர்கள் மூலம் பெற்ற சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பிற்கு ஈடு இணை யாரும் கிடையாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது
 
கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்கள் அவருடன் நடிப்பதை பெருமையாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவாஜிகணேசனுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மபூஷன் ஆகிய விருதுகள் கிடைத்தது என்பதும் அதேபோல் சேவை விருது கலைமாமணி விருது உள்பட பல விருதுகள் அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சிவாஜிகணேசன் அவர்களின் உடல் மறைந்தாலும் அவரது நடிப்பு சினிமா உள்ளவரை இருக்கும்  இன்னும் பல நூறு தலைமுறைக்கும்  அவருக்கான ரசிகர்கள் உருவாகுவார்கள். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்  93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்  கூகுள் நிறுவனம் doodle வெளியிட்டுள்ளது.