திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:46 IST)

முரசொலி மாறனின் 88 ஆவது பிறந்ததினம்… மாலையிட்டு ஸ்டாலின் மரியாதை!

திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 88 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மைத்துனரும் திமுகவின் சார்பாக மத்திய அமைச்சராகவும் இருந்தவர் மறைந்த முரசொலி மாறன். இவரின் இன்றைய 88 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னை முரசொலி அலுவலகத்தில் இருக்கும் அவரின் சிலைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.