திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (13:38 IST)

ராமாயணத்தின் 3டி வெர்ஷன்: பிராபாஸின் ஆதிபுருஷ் கரு இதுதானா?

பிரபாஸில் ஆதிபுருஷ் திரைப்படம் 3டி படமாக 5 மொழிகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவின் கவனிக்கப்பட வேண்டிய  நாயகனாக மாறினார் பிரபாஸ். இப்படத்தை அடுத்து, அவர் நடிப்பில் வெளியான் சாஹோ மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு படுதோல்வி அடைந்தது.
 
அதையடுத்து அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எனபவரின் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். 
 
இதனையடுத்து இப்போது அவர் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. 
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021 தொடங்கி 2022 படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீமையை வெற்றி கொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை (ராமாயணம்) அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாக இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.