பிரமாண்டமாக உருவாகும் பிரபாஸின் "அதிபுருஷ்" பர்ஸ்ட் லுக்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:17 IST)

இந்திய சினிமாவில் பாகுபலி ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதில் நாயகனாக நடித்த பிரபாஸ் உலகம் அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். இதனால் அவர் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இப்படத்தை அடுத்து, அவர் நடிப்பில் வெளியான் சாஹோ மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு படுதோல்வி அடைந்தது.

அதையடுத்து அவர் ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எனபவரின் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். இடத்தின் போஸ்டர் ரசிகர்ளின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தற்ப்போது ஓம் ரவுட் என்பவர் இயக்கத்தில்
"அதிபுருஷ்" என்ற இதிகாச திரைப்படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். பிரபாஸின் 22வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை
டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷண் குமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மிரட்டான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சறுமுன் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதில் மேலும் படிக்கவும் :