வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:03 IST)

முதல் படத்தில் லாஸ்லியாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடிகர் ஆரி நடிக்கும் இப்படத்தின் பிக்பாஸ் அபிராமி, மற்றும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது இந்த இரண்டு படத்திற்கும் சேர்த்து லாஸ்லியா வெறும் 25 லட்சம் மட்டும் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.ரசிகர்களால் புகழப்பட்டு ரெண்டிங்கில் இருக்கும் லாஸ்லியாவிற்கே இவ்வளவு தான் சம்பளமா..? என ஷாக்காகியுள்ளனர் கோலிவுட் ரசிகர்கள். இருந்தும் இது உறுதிப்படுத்தாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.