திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (09:44 IST)

நயன்தாராவே வாங்கும்போது நான் வாங்க கூடாதா? சம்பளம் விஷயத்தில் அடாவடி செய்யும் சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்களில் நடித்து வருகின்றனர். கொரோனா லாக்டவுனில் சமந்தா டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றிற்காக சமந்தாவிடம் பேச்சு வார்த்தை நடத்திய தயாரிப்பாளரிடம் எடுத்த எடுப்பிலேயே சமந்தா ரூ. 3.5 கோடி சம்பளம் கொடுங்கள் என்று கேட்டாராம்.

இதனால் அந்த தயாரிப்பாளர் ஒன்றும் பேசாமல் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடோடி வந்துவிட்டாராம். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை நயன்தாராவே 5 லிருந்து 6 கோடி வரை சம்பளம் வாங்கும் போது அவருக்கு அடுத்த லிஸ்டில் இருக்கும் நான் 3.5 கோடி கேக்குறது தப்பா..? என நெருங்கிய வட்டாரத்திடம் நியாயம் பேசுகிறாராம் சமந்தா. அதுவும் சரி தானே... தயாரிப்பாளர்களே பார்த்து ஏதவாது செய்யுங்க பாப்பாவுக்கு.