1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2023 (13:40 IST)

பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த ராமநாதபுரம் நீதிமன்றம்!

லத்திகா என்ற மொக்கை படத்தை ஒரு வருடத்துக்கும் மேல் சொந்த செலவில் ஓட்டி ஏகப்பட்ட பப்ளிசிட்டி செய்து சினிமா உலகினரை ‘யார்றா இவரு’ என வியக்க வைத்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அதன் பின்னர் சந்தானத்தோடு நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் வெற்றியால் குறிப்பிடத்தகுந்த நகைச்சுவை நடிகராக உருவானார்.

ஆனாலும் செக் மோசடி வழக்கில் கைது என சில சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று வந்தார். இப்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் ஊடக வெளிச்சம் இல்லாமல் இருந்து வருகின்றார்.

இந்நிலையில் 15 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக இரால் பண்ணை அதிபர் ஒருவரை ஏமாற்றிய வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜாராகததால் அவருக்கு இப்போது பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது ராமநாதபுரம் நீதிமன்றம். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.