திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (13:51 IST)

பார்ன் பட நடிகை மியா கலிபா…. ஏலத்தில் விட்ட பொருள் ஒரு லட்சம் டாலருக்கு விற்பனை – அது என்ன பொருள் தெரியுமா?

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மியா கலிபா தன்னுடைய மூக்குக் கண்ணாடியை ஏலத்துக்கு விட்டுள்ளார்.

போர்னோ ஸ்டாரான மியா கலிபா உலகெங்கும் பிரபலமானவர். அந்த துறையில் ஈடுபட்டு இருக்கும் ஒரே இஸ்லாமிய பெண் அவர் என்பதால் அடிப்படைவாதிகளிடம் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அந்த துறையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் அந்த துறையில் தான் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை ஏலம் விட்டுள்ளார். அனைவரும் வாய்பிளக்கும் வகையில் அந்த கண்ணாடி ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகியுள்ளது. அந்த தொகை முழுவதையும் அவர் லெபனானில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விதமாக பயன்படுத்த உள்ளார்.