வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (18:03 IST)

தனுஷின் இட்லி கடை படத்தில் இருந்து அசோக் செல்வன் விலகியது ஏன்?

பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து   தனுஷ் மீண்டும் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்து வருகிறது.

இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் அசோக் செல்வனும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அந்த தகவலை அசோக் செல்வன் மறுத்தார்.

ஆனால் முதலில் அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தாகவும், ஆனால் அவருடைய கதாபாத்திரத்துக்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லை என்பதால் தனுஷிடம் சொல்லிவிட்டு நாகரிகமாக விலகிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.