1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (12:42 IST)

எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பிரபல தொலைக்காட்சி நடிகை

கேரளாவில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்  கவிதா அவருக்கு வயது(35). 
மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 4 வயதில் மகள் உள்ளார். அவரது கணவரும் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
 
கவிதாவுக்கு பெங்களூரில் அழகு நிலையம் தொடங்க பணம் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவிதா தனது  வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கவிதா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இதனால்  இது  குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.