திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (18:22 IST)

2 நாள் கைக்குழந்தையை கழிவறைக்குள் போட்டுக் கொன்ற கொடூர தாய்

கேரளாவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன குழந்தையை அவரது தாய் கழிவறைக்குள் போட்டுச் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்கோட்டில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையின் கழிவறையில் அடைப்பு ஏற்பட்டதால், அதனை சீர் செய்ய பணியாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை கழிவறைக்குள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திரிச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர செயலை செய்த, குழந்தையின் தாயை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.