விஜய்யோடு மூன்றாவது முறையாக இணைந்த நடிகர்!

Last Modified புதன், 20 ஜனவரி 2021 (18:10 IST)

பிகில் மாஸ்டர் ஆகிய படங்களை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்திலும் பூவையார் நடிக்க உள்ளார்.

விஜய் நடித்த பிகில் படத்தில் சின்னத்திரை குழந்தை நட்சத்திரமான பூவையார் நடித்து பிரபலமானார். இவர் சமுத்திரக்கனி இயக்கிய அப்பா படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இதையடுத்து மாஸ்டர் படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதபாத்திரத்தைக் கொடுத்தார் இயக்குனர் லோகேஷ். அந்த படத்திலும் பூவையாரின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்நிலையில் இப்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்திலும் பூவையார் நடிக்க உள்ளாராம். இதன் மூலம் விஜய்யுடன் ஹாட்ரிக்காக படங்களில் நடிக்க உள்ளார் பூவையார்.இதில் மேலும் படிக்கவும் :