மாஸ்டர் எஃபெக்ட்… சுல்தான் படமும் தியேட்டர் ரிலீஸா?

Last Modified புதன், 20 ஜனவரி 2021 (17:40 IST)

மாஸ்டர் படத்தின் வெற்றியால் சினிமா உலகினர் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில் இப்போது வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை மாஸ்டர் படத்துக்குப் பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இருந்தார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு. ஆனால் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த முடிவுக்குக் காரணம் சூர்யா குடும்பத்தினர் மீது திரையரங்க உரிமையாளர்கள் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானதே.

ஆனால் இப்போது மாஸ்டர் படத்தின் வெற்றி எல்லாவற்றையும் மாற்றியுள்ளது. தொடர்ந்து ரசிகர்களை திரையரங்குக்கு வரவழைக்க வேண்டுமானால் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸாகவேண்டும் என்று திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பழைய பகையை எல்லாம் மறந்துவிட்டு சுல்தான் படத்தை திரையரங்குக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதில் மேலும் படிக்கவும் :