திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (07:43 IST)

‘மாஸ்டர்’ காட்சிகள் லீக்: ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்!

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியான நிலையில் ஜனவரி 11ஆம் தேதியே இணையத்தில் ஒரு சில காட்சிகள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இதனையடுத்து படக்குழுவினர் விசாரணையில் இறங்கிய போது இந்த படத்தில் பணிபுரிந்த டிஜிட்டல் நிறுவனமொன்றில் பணிபுரிந்த ஊழியர் தான் இந்த காட்சிகளை இணையத்தில் கசிய விட்டார் என்பது தெரியவந்தது
 
இதனை அடுத்து தற்போது தயாரிப்பு தரப்பில் இருந்து சம்பந்தப்பட்ட டிஜிட்டல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசில் ‘மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ்க்கு முன்பாகவே காட்சிகள் வெளியான விவகாரத்தில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன பதிலளிக்கப் போகிறது? இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லுமா? அல்லது பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்