செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (10:12 IST)

மாஸ்டர் படம் இந்தியில் மட்டும் தோல்வியா? பின்னணி என்ன?

மாஸ்டர் திரைப்படம் இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியான நிலையில் அங்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் முதல் முறையாக இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியானது. தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் படுதோல்வி என்று சொல்லப்படுகிறது.

வட இந்தியா முழுவதும் இதுவரை 2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் தென்னிந்தியாவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெளியான படம் என்பதும் விஜய் மற்றும் விஜய்சேதுபதி மக்களுக்கு அறிமுகமான நடிகர்கள் என்பதாலும் மிகப்பெரிய ஓபனிங் இருந்தது. ஆனால் வட இந்தியாவில் இரண்டு பேருமே அறிமிகமில்லாத நடிகர்கள் என்பதால் படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை என சொல்லப்படுகிறது.