என்னை யாரும் அரெஸ்ட் பண்ணலை, நேற்று மட்டும் 3 படம் பார்த்தேன்: பூனம் பாண்டே
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே நேற்று மும்பையில் கைது செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் நான் வீட்டில் பத்திரமாக இருக்கிறேன் என்றும் நேற்று மட்டும் 3 திரைப்படம் பார்த்ததாகவும் பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மும்பையில் தனது ஆண் நண்பருடன் ஊரடங்கு நேரத்திலும் ஊர் சுற்றிக் கொண்டிருந்த பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு விதியை மீறியதாகதாகவும் கொரோனா வைரஸை பரப்பும் வகையில் நடந்து கொண்டதாகவும் பூனம் பாண்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் நேற்று செய்திகள் வெளிவந்தது. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியானதால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் இதுகுறித்து பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ’மும்பையில் நான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என்றும் தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும் தான் வீட்டில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவை தான் மதிக்கும் குடிமகள் என்றும் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் நான் வெளியே செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் நேற்று மட்டும் 3 திரைப்படங்கள் பார்த்ததாகவும் அவை அனைத்தும் தன்னைக் கவர்ந்ததாகவும் பூனம் பாண்டே அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மும்பையில் போலீசாரால் பூனம் பாண்டே கைது செய்யப்பட்டது என்பது வதந்தி என உறுதியாகி உள்ளது. பிரபல நடிகை ஒருவர் கைது என்ற தகவல் பெரும் பரபரப்பை அடைந்த நிலையில் தற்போது அந்த வதந்திக்கு பூனம் பாண்டேவின் வீடியோவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது