திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 மே 2020 (16:08 IST)

ஊரடங்கை மீறி காதலருடன் காரில் சுற்றிய பிரபல நடிகை அதிரடி கைது...!

சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.

இதன் ஒரு படிமேலே சென்று, தனது ஆபாச வீடியோக்களுக்கென்றே தனி வெப்ஸைட் ஒன்றை இயக்கி வரும் இந்த கவர்ச்சி கன்னி அதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு மேலும் முழு வீடியோவை பார்க்க என் வெப்சைட் பக்கத்துக்கு வாருங்கள் என அழைத்து அத்தனை ரசிகர்களையும் கிறங்கடித்து விடுவார். இப்படி தொடர்ந்து எதாவது பிரச்சனைகளில் சிக்கி தலைப்பு செய்தியாக பேசப்படுவது ஊரறிந்த உண்மை தான்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுக்க நாட்டில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நேரத்தில் நடிகை பூனம் பாண்டே நேற்று தனது ஆண் நண்பருடன் மும்பையில் உள்ள மெரைன் டிரைவ் சாலையில் சொகுசு காரில் சென்றுள்ளார். அந்த காரை மடக்கி பிடித்த போலீசார் விசாரித்தபோது எவ்வித காரணமின்றி வெளியில் சுற்றித்திரிந்து வருவதை அறிந்து அவர்கள் மீது FIR பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர் நடிகை மன்னிப்பு கேட்டதை அடுத்து எச்சரித்து விடுத்துள்ளனர்.