என்னை ஏன் விட்டுபோன! மேடையில் கதறி அழுத டிடி - வைரலாகும் வீடியோ!

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (14:25 IST)
முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். 
விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக  தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். அதே தொலைக்காட்சியில் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பேட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை  டிடி தொகுத்து வழங்கி வருகிறார். பேசத் தயங்கும் பிரபலங்கள், எப்போதுமே லைம் லைட்டில் இருக்கும் செலிபிரட்டிகளிடம் சாமானியன் கேட்க விரும்பும் கேள்விகள் என மக்களின் பல்ஸ் பிடித்து இன்டர்வியூ செய்வதில் டிடி கில்லாடி
 
இதற்கிடையில் கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டனர். 
 
குடும்ப வாழக்கையில் பல பிரச்னைகளை சந்தித்தாலும் தனது கேரியரில் அதீத கவனமெடுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது ‘என்கிட்ட மோதாதே 2 ‘என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இதன் ப்ரோமோ வீடியோவில் ப்ரஜன், டிடி இருவரும் மாறி மாறி உண்மையான காதலர்கள் போல வசனங்களை பேசி நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் அழுதே விட்டார்கள் என்றால் பாருங்களேன். இதை கண்ட மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி இவர்கள் நடிப்பை பாராட்டினார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :