திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (08:26 IST)

கேன்ஸ் பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே சூட்கேஸ் மாயம்: அதிர்ச்சியில் உதவியாளர்கள்!

pooja
பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பூஜா ஹெக்டே தனது சூட்கேசில் விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை வைத்து இருந்தால் அந்த சூட்கேஸ் மர்ம நபர்களால் திருடப்பட்டது 
இதனை அடுத்து பூஜா ஹெக்டே மற்றும் உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக தெரிகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற பூஜா ஹெக்டே மாற்று உடை கூட இல்லாமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
இருப்பினும் தங்க வைர நகைகளை அவர் சூட்கேஸில் வைக்காமல் கழுத்தில் அணிந்து இருந்ததால் அவை திருடு போகாமல் தப்பித்தது என்று பூஜா ஹெக்டே நிம்மதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது