1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (16:01 IST)

இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதி – விஜய் பட நடிகை நெகிழ்ச்சி

pooja hegde
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீஸ்ட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
தற்போது இந்தி மற்றும் பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டார்.
 
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும், இந்த ஆண்டு 75 வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17 ஆம் தேதி தொடங்கியது. இதில், முதன்முறையாக கவுரத்திற்கான நாடாக இந்தியா பெயர் அறிவிக்கப்பட்டது, இந்தியாவில் இருந்து, மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் , ஏ.ஆ.ரஹ்மான், நடிகர் மாதவன்,  பிரசூன் ஜோஷ் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டனர்.
 
இதில் ஒரு பகுதியாக தென்னிந்திய நடிகர்களான பூஜா ஹெக்டே, தமன்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இதுகுறித்து நடிகை பூஜா ஹெக்டே, இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதி நிதியாக நான் இங்கு வந்திருக்கிறேன்.இந்திய சினிமாக்களை கொண்டாடும் ஓர் இந்திய நடிகையாக இந்த விழாவில்  நான் கலந்துகொண்டிருப்பது எனக்கு கவுரவம் அளிப்பதாக உள்ள்து எனத் தெரிவித்துள்ளார்.