1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 மே 2022 (13:45 IST)

ரக்கெட்ரி படத்தைக் கைப்பற்றியதா உதயநிதியின் ரெட்ஜெய்ண்ட்ஸ்?

மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருந்தார் மாதவன். சில முறை ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் கேன்ஸ் விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது படத்தின் புதிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரெட்ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தமிழகத்தில் ரெட்ஜெய்ண்ட்ஸ் வெளியிடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரிசையாக பிரபல நடிகர்களின் படங்களை ரெட் ஜெய்ண்ட்ஸ் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.