செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 20 மே 2022 (16:04 IST)

கேன்ஸ் விழாவில் ரஹ்மானோடு பூஜா ஹெக்டே… வைரலாகும் புகைப்படம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழா தற்போது தொடங்கியுள்ளது.

பிரான்சில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா உலக அளவில் பிரபலமாக உள்ளது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு கேன்ஸ் 75வது சர்வதேச திரைப்பட கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து மாதவன் இயக்கிய ராக்கெட்ரி, பார்த்திபனின் இரவின் நிழல், ஏ.ஆர்.ரகுமானின் லெ மஸ்க் உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் இந்தியா சார்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏ.ஆர்.ரகுமான், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் இன்று இந்திய கலைஞர்களான கமல்ஹாசன், ரஹ்மான் மற்றும் மாதவன் உள்ளிட்டோருக்கு கேன்ஸ் விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டேவும் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்டார். தற்போது அவர் ஏ ஆர் ரஹ்மானோடு இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது.