1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (11:46 IST)

’பொன்னியின் செல்வன்’ வசூல் ரூ.300 கோடி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Ponniyin selvan
பொன்னியின் செல்வன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதும் நான்கே நாளில் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்நிலையில் இந்த படம் வெளியாகி 7 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இந்த படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் 300 கோடி ரூபாய் வசூல் தாண்டி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் டிரேடிங் வட்டாரங்கள் இந்த படத்தின் வசூல் குறித்து கருத்து கூறிய போது ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்யும் என்றும் தமிழில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை வைத்திருக்கும் விக்ரம் படத்தின் சாதனையை இந்தப் படம் முறியடிக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
 
மேலும் தமிழகத்தில் மட்டும் இந்த படம் 124 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.