1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gopala krishnan asks about Rs.41,000 crore

ஜேசிடி பிரபாகரன் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன? கே.பாலகிருஷ்ணன் கேள்வி!

gopalakrishnan
ஜேசிடி பிரபாகரன் கூறிய ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன? கே.பாலகிருஷ்ணன் கேள்வி!
ஓ பன்னீர்செல்வம் அனுமதி அளித்தால் எடப்பாடி பழனிச்சாமி பதுக்கி வைத்துள்ள 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிட தயார் என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜேசிடி பிரபகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த 41 ஆயிரம் கோடி ரகசியம் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார் 
 
இதுதொடர்பாக அவர் பதிவு செய்துள்ள டுவிட்டரில் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகரன் எடப்பாடிபழனிசாமி எச்சரிக்கும் வகையில் ஊடகங்களில் பேசி வருகிறார் 
 
அவ்வளவு பெரிய தொகையை யாருடையது? அது ஏதாவது கணக்கிற்கு உட்பட்டதா? வருமான வரி செலுத்தப்பட்டதா? என்பதை அரசு தலையிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன்  கூறியுள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விண்வெளி பயணம் சென்ற அமெரிக்க பூர்வகுடி பெண் நிக்கோல் மான்: தடைகளைத் தாண்டி வரலாற்று சாதனை