திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (09:05 IST)

ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணிக்கு அடுத்த வெற்றி… மழையால் விரைவில் முடிந்த போட்டி!

இந்திய மகளிர் அணி தற்போது ஆசியக்கோப்பை தொடரில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் ஆடவர் அணிக்கான ஆசியக்கோப்பை நடந்து முடிந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கான ஆசியக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில் 7 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த மலேஷியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிமூலமாக வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய மலேஷியா அணி பேட் செய்யும் போது 5.2 ஓவர்களில் மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 16 ரன்களை சேர்த்திருந்தது. கடைசி வரை மழை நிற்காததால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது ஆசியக்கோப்பையில் இந்திய அணிக்கு 2 ஆவது வெற்றியாகும்.