புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (21:15 IST)

காதலை அறிவித்த ‘பொன்னியின் செல்வன் நடிகை’: வைரல் புகைப்படம்!

aiswarya lakshmi1
காதலை அறிவித்த ‘பொன்னியின் செல்வன் நடிகை’: வைரல் புகைப்படம்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலை தெரிவித்துள்ள நிலையில் அவர் பதிவு செய்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 
 
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அடுத்தவர் ஐஸ்வர்யா லட்சுமி என்பதும் அதனை அடுத்து அவர் நடித்த கட்டா குஸ்தி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் நடித்த மாஸ்டர், கமலஹாசன் நடித்த விக்ரம் உள்பட ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தவர்தான் அர்ஜூன் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அர்ஜுன் தாஸை கட்டி அணைத்தபடி இருக்கும் இந்த புகைப்படத்தில் கீழே லவ் எமோஜியை அவர் பதிவு செய்த அடுத்த இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
Edited by Siva