புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 ஜனவரி 2023 (22:12 IST)

''சுவாமியே சரணம் ஐயப்பா''... நடிகர் ஜெயம் ரவி பதிவிட்ட புகைப்படம் வைரல்

Jayam Ravi
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜெயம் ரவி. இவர்  நடிப்பில், ஜெயம், சம்திங், சம்திங், எம் குமரன், நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.

சமீபத்தில், இவர், கார்த்திக், விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்த, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படமும் தமிழ் சினிமாவின் அதிக வசூலீட்டிய படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில்,  ஜெயம் ரவி, சபரிமலை ஐயனுக்கு மாலை போட்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் சுவாமியே சரணம் ஐயப்பா என்று பதிவிட்டு தன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இது வைரலாகி வருகிறது.