திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:43 IST)

பொன்னியின் செல்வன் 2-க்கு அதிகாலை சிறப்புக் காட்சிகள் இல்லை… பின்னணி என்ன?

தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் இடம்பெற்ற பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை இன்று இரண்டாம் பாகம் வெளியாகிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

படத்தின் ரிலீஸை ஒட்டி ப்ரமோஷன்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்தன.  படத்துக்கு முதலில் எதிர்பார்த்த அளவுக்கு முன்பதிவுகள் இல்லை. ஆனால் இறுதி நாட்களில் கணிசமான முன்பதிவு நடந்தது. இந்நிலையில் இன்று படம் அதிகாலை சிறப்புக் காட்சிகள் இல்லாமல் ரிலீஸாகியுள்ளது

படத்துக்கு ஏன் அதிகாலை காட்சி திரையிடப்படவில்லை என ரசிகர்கள் குழம்பியுள்ள நிலையில் படக்குழுவினரே அதிகாலைக் காட்சிகள் வேண்டாம் என்று இருந்துவிட்டதாக படக்குழு சார்பாக சொல்லப்படுகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.