வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2023 (20:27 IST)

'பொறாமையால் பீரில் விஷம் கலந்து கொடுத்த சகோதரர்'- நடிகர் பொன்னம்பலம் தகவல்

ponnampalam
தமிழ் சினிமாவில் கொடூரமான வில்லனாக வலம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இவர் சூப்பர் ஸாடார்களான ரஜினி, கமல்ஹசன், விஜய், அஜித், சரத்குமார் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் பொன்னம்பலம்.

இவரது அபார வில்லத்தன நடிப்பால் மக்கள் உண்மையிலேயே இவர் அவ்விதம் கொடூரமாக நடந்துகொள்ளுகிறாரோ என நினைக்கும் அளவுக்கு அவரது நடிப்பு பேசப்பட்டது.

சமீபத்தில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கிட்னியை மாற்ற வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில்,  மருத்துவச் செலவிற்கு, நடிகர் பொன்னம்பலம் நட்சத்திரங்களிடம் உதவிவேண்டுமெனக் கேட்டு வீடியோ  வெளியிட்டார்..

இதைப்பார்த்த நடிகர் கமல்ஹாசன், சரத்குமார் போன்றோர் அவருக்கு உதவி செய்தனர். பின்னர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிகர் பொன்னம்பலத்தின் கிட்னியை மாற்ற பணவுதவி செய்தார். இதற்கு நன்றி தெரிவித்து, நடிகர் பொன்னம்பலம் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.

தற்போது சென்னையிலுள்ள தன் இல்லத்தில் பொன்னம்பலம் ஓய்வெடுத்து வருகிறார். அவர் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ‘’மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தன் அறுவைச்சிகிச்சைக்கு உதவியர்களுக்கு நன்றி கூறினார்.

மேலும், போதைப்பழக்கத்தால் என் சிறுநீரகம் பழுதடையவில்லை.என் தந்தைக்கு மொத்தம் 4 மனைவிகள்  அதில், 3 வது மனைவியின் மகன் என் மேலாளராகப் பணியாற்றியபோது, ஒருமுறை பீரில் விஷம் கலந்து கொடுத்தார். அது ஸ்லோ பாய்சன் என்பதால் என் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதெல்லாம் பொறாமையால் செய்யப்பட்டது. இது எனக்கே தெரியாது. என்னுடன் இருந்தவர்கள் என்னிடம் இதைக் கூறினர், தற்போது நான் இறைவன் அருளால் நன்றாக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.