வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (18:54 IST)

நாட்டாமை படத்தில் சரத்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

90ஸ் காலகட்டத்தின் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்தர்வகளில் முக்கியமானவர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து முகமறியப்பட்டார். பின்னர் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். 
 
தொடர்ந்து தமிழில் சூரிய வம்சம், நாட்டாமை, ஐயா உள்ளிட்ட சில வெற்றி படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார். தொடர்ந்து நடித்து வரும் அவர் நாட்டாமை படத்தில் நடித்ததற்காக ரூ. 5 லட்சம் சம்பளம் வாங்கினாராம். இது அப்போதைக்கு பெரிய தொகையாக பார்க்கப்படுகிறது. 
 
அதே இந்த காலத்தில் என்றால் ரூ. 5 கோடி கூட கொடுத்திருப்பார்கள். கடைசியாக சரத்குமார் விஜய்யின் நடித்த வாரிசு படத்தில் அவரது அப்பாவாக நடித்ததற்கு ரூ. 2 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.