செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (15:27 IST)

சூப்பர் ஸ்டாருடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

rajinikanth- pon radhakrishnan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்  த.செ.ஞானவேல் இயக்கிவரும் படம் தலைவர் 170

இந்த படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக படக்குழுவினர் ரஜினியோடு திருவனந்தபும் சென்றனர். இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலைவர் 170 பட ஷூட்டிங்  நடைபெற்றது.

நடிகர் ரஜினிகாந்த்தை ரசிகர்கள் நேரில் சந்தித்து செல்பி எடுத்து வரும்  நிலையில், ரசிகர்களுடன் சகஜமாக ரஜினிகாந்த் கலந்துரையாடும் வீடியோக்கள் பரவியது.

இன்று தலைவர் 170 பட ஷூட்டிங் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் நடந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.